Saturday, November 20, 2010

புற்று நோய்க்கு வலுச் சேர்க்கும் நவீன வாழ்க்கை முறை

     புற்று நோய் பற்றி யாவரும் மனதிலும் பயம் உண்டு. ஆனாலும் எனக்கு புற்றுநோய் இருக்கா? கண்டுபிடித்து சொல்லுங்கள் டாக்டர் என்ற நிலையில் தான் எமது சமூகத்தில் பலர். ஆனால் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு எல்லாம் விண்ணைத் தாண்டி ஒலிக்கும் விதத்தில் வீச்சம் கொண்டு நகர்கின்றன. எனினும் புற்றுநோய்க்கு வலுச்சேர்க்கும் காரணிகள் இவை என்பது பற்றியும் எல்லோர்க்கும் தெரியும் இருப்பினும் இவை எல்லாம் ஏட்டு உருவில் மட்டும் தான் என்றுதான் ஐயம் தோன்றுகிறது. எனக்குப் புற்று நோய் இருக்கா என்ற ஐயப்பாட்டுடன் பயம் மிகுதியாகப் பெற்று சோதனைகள், இன்னும் சோதனைகள், சோதனை மேல் சோதனைகள் என்று பணத்தை வீணாக்கும் மக்கள் கூட்டம்.



     ஆரோக்கியமான வாழ்வுக்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ள எத்தனித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எதிர்வரும் காலங்களில் எம் சந்ததி புற்றுநோயின் பிடியில் இருந்து மீளும் நிலை ஏற்படும்.



     ஆரோக்கியமற்ற உணவுமுறை அது தாண்டி உடற்பருமன் தேகப்பியாசம் துளியளவும் இன்றி உயர் செறிவில் கொழுப்புச் செறிவு இவையெல்லாம் ஒன்றில் ஒன்று ஆளுகை செய்கின்ற விசமிகள் என்று தான் கூற வேண்டும். மிகை உடலெடை கொண்ட பெண்களில் மார்பகம், சூல்சுரப்பி மற்றும் கருப்பையின் அகவுறை என்பவற்றில் புற்றுநோய் விருத்தியாகின்றது. இம்மூன்று உறுப்புகளிலும் கலவளர்ச்சியை தூண்டும் ஞநளவசழபநn ஈஸ்ட்ரோஜன் என்னும் ஒர்மோன் உயிரியல் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றது. கொழுப்பு மிகை உணவிற்கும் இவற்றுக்கும் மிடையான புற்றுநோய் தொடர்பை கருதுமிடத்து கொழுப்பு உணவுகளே ஈஸ்ரோஜன்னை குருதியோட்டர்ரினுள் மீள உறிஞசப்படக் கூடியவாறு அனுமதிக்க பெருங்குடலைத் தூண்டுகின்றதென நம்பப்படுகின்றது. இவ்வாறே கொழுப்புணவும் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கும் இடையேயான தொடர்பை வநளவழளவநசழநெ எனும் ஓர்மோன் தீர்மானிக்கின்றது.



     இவற்றின் சமநிலைக்குழப்பம் புற்றுநோயை உருப்பெறச் செய்கின்றன.



     இது இவ்வாறே இருக்க தேகப்பியாசமின்மையும் மிகை கொழுப்புணவுடன் கைகோர்த்து நகர்கின்றது. உட்கார்ந்து பணியாற்றும் வாழ்க்கை முறை பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றுக்கு வழி வகுக்கின்றன. அத்துடன் தேகப்பியாசம் இன்மையே இங்கு தொடர்புபடுத்தப்படுகின்றது. அதாவது சொகுசு வாழ்க்கை முறையே உட்கார்ந்து பணியாற்றும் வாழ்க்கை என்று கருதப்படுகின்றது. தேகப்பியாசம் இன்மையில் கழிவுப் பொருட்கள் குடலினூடு செல்கையில் தங்கியிருக்கும் இடைத்தங்கல் நேரம் மிகைப்படுத்தப்படுகிறது. இதனால் புற்றுநோயாக்கிகள் குடலுடன் தொடர்பில் நீண்ட நேரம் இருக்கின்றன. இதனால் குடலில் புற்றுநோய் ஊக்கிகள்pன் தொடர்பினால் குடற்புற்றுநோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கின்றது. இவற்றை தாண்டி உடற்செயற்பாடு ஆனது ஆண் பெண் இருபாலாரிலும் இலிங்க ஓமோன்களின் சுரப்பு அளவில் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றது. இதனால் ஞநளவசழபநn வநளவழளவநசழநெ அளவில் ஏற்படும் மாற்றமும் புற்றுநோய்க்கு வலுச் சேர்ப்பதை முன்பு நாம் அறிவோம். இவற்றுடன் அல்லாது கர்ப்பத்தடை மாத்திரை வகைகளும் இலிங்க ஓமோன்களின் அளவில் மாற்றத்தை உண்டு பண்ணுவது அறியப்பட்ட விடயமேயாகும்.இதுவும் நம் சமுகத்தில் பெரும் பங்கை வகிக்கின்ற ஒரு விடயமே ஆகும்



     இது இவ்வாறிருக்க புகை மது இவையும் சொல்ல வேண்டியதில்லை. புகையில் 4000க்கு மேற்பட்ட இரசாயனப்; பொருட்கள் உள்ளன. புகைத்தல் பற்றி சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அது எல்லோரும் அறிந்த தொன்று என்றே கூற வேண்டும்.



     எனினும் மதுசாரத்தால் ஈரல் பாதிப்புறும் போது பல இரசாயனப் பொருட்கள் உடலில் பிரித்தழிக்கப்படாது தேங்குகின்றன. இதனுள் புற்றுநோய் ஊக்கிகளும் அடங்குகின்றன.



     ;.சூடான உணவுகள் காரம் சேர் உணவுகள் புகையூட்டப்பட்ட உணவுகள் இவை எல் லாம் நைட்ரைட்டுக்கள் கொண்டுபதனிடுவதால். இந்நைட்ரைட்டுக்கள் புற்றுநோயாக்கிகளாக அமைவதாலும் இவை நாகரிக உலகில் தொலைக்காட்சி, விளம்பரங்களில் அதிரவைக்கும் கவர்ச்சிகரமான தன்மையைக் கொண்டுள்ளமை கவலைக்குரியதாகவே உள்ளது.



     இது இவ்வாறிருக்க மிகை வளமூட்டிய மரக்கறிகள் மருந்தே;றிய, மற்றும் பூச்சி நாசினி விசிறிய மரக்கறிகள் இவையாவும் செய்யும் கொடுமையின் எல்லை தாங்க முடியாது என்றே கூற வேண்டும். பொதுவாக மரக்கறிகள் நார்ப்பொருட்கள் இவை குடலில் நீண்ட நேரம் தங்குவன. இவற்றுக்கு மருந்துகள் ஏற்றியும் பூச்சிநாசினிகள் விசிறியும் இருப்பின் சொல்ல வேண்டுமா குடலில் நீண்ட நேரம் இவ் இரசாயனங்கள் தங்குவது.. இதனால் குடற்புற்று நோய் வலுச் சேர்க்கப்படுகின்றது என்றால் மிகையாகாது.



     எனவே புற்று நோயில் இருந்து விடுதலை பெற்ற ஓர் சமூகத்தை உருவாக்கி ஆராக்கியம் மிக்க சமுகத்தை நோக்கி நகர வாழ்க்கை முறையை செப்பனிடுவோம்.