Saturday, December 4, 2010

இளவயதில் பாரிச வாதம் ஏற்படுத்தும் புகைத்தல

பாரிச வாதம் ளவசழமந என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமாகும். இதில் கை கால்வழங்காது
போதல் அல்லது இழுத்தல் குரல் மாற்றம் முகம் கோணலாதல் (இது முகவாதம் )என்பன
கானப்படலாம் இது தொடர்பாக யாவர் மனதிலும் பயம்காணப்படுகின்றது. அத்துடன் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கட்கு மனச்சோர்வுஏற்படுவது கருதத்தக்க விடயமாகும். பாரிசவாதத்தின் பிடியில் இருந்து மீண்டு விடினும்பாரிசவாதத்திற்கு ஆளானவர்கள் தம்மை தாமே குறைத்து மதிப்பிடும் தன்மையம் தங்கி வாழும் நிலையையும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றனர்.
இதைவிட பாரசவாதத்தினால் ஒருவர் பாதிப்புறும் போது அவரது முழுக்கு குடும் பமுமே
அவரினால் பாதிப்புறுவதுடன் அவர்களுக்கான பராமரிப்பு என்ற தொடர் நிலையை சகிக்க
முடியாமல் கூட சகிக்கின்ற நிலை நம் சமூகத்தில் காணப்படுகின்றது.
பெரும்பாலும் முதுமை நிலையில் பாரிசவாதம் ஏற்படினும் இளவயதினருக்கு ஏற்படுவதற்கான
காரணங்களில் முக்கிய இடத்தை புகைத்தல் பெறுகின்றது.
ஒருவர் வயது முதிர்ந்த நிலையில் பாரிசவாதத்தால் பாதிப்புறின் அவர் பெரும்பாலும்
ஏனைய குடும்பத்தினில் தங்கி வாழ்கின்றவராகவே காணப்படுவார். எனினும் இளம் வயதினரை
தாக்கும் போது தாக்கப்படுபவர் குடும்பத்தின் தலைவராகவும் முழுக்குடும்பத்தையும் கொண்டு
நடத்துகின்ற பொறுப்புக்குரியவராகவும் இருப்பதால் இதன் பாதிப்பை கருத்தில் கொள்வது
மிகவும் முக்கியமான ஒரு விடயமாகவே உள்ளது.
புகைப்பதனால் அதாவது சிகரெட்டில் காணப்படும். நிக்கோட்டின் என்னும் பொருள்
குருதிக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றது.
இவ் அடைப்பானது இதயத்திற்கு குருதி வழங்கும் குழாய்களில் ஏற்படின் மரடைப்பு ;
எனவும் மூளைக்கு குருதி வழங்கும் குழாய்களில் ஏற்படும் போது பாரிசவாதம் எனவும் பெயர்
கொள்கின்றது.
இங்கு குருதிக்குழாயின் அகவளி பாதிப்புறுவதுடன் குருதிக்குழாயில் கொழுப்புப்
படிவுறுவதுடன் குருதிக் குழாயின் உள்விட்டம் குறைக்கப்படும் இதன் ஈற்று விளைவாக குருதி
விநியோகம் தடைப்படும்.
இவற்றுடன் மட்டு அல்லாமல் புகைத்தல் பல கூட்டு வளைவுகளையும் தன்னகத்தே
கொண்டிருப்பதால் அதாவது குருதியில் ர்னுடு என்னும் நல்ல கொழுப்பு வைகயின் அளவை
கறைப்பதுடன் மட்டுமல்லாது உயர் குருதியமுக்கம், நீரிழிவு, இவற்றுடன் மட்டுமல்லாது இரத்த
கழாயினுள் குருதி உறையும் தன்மையையும் என்றும் பாதக விளைவுகளை கொண்டிருப்பதால் புகைத்தல்
பாரிசவாதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகையாக்கப்படுகின்றது.
புகைத்தல் பற்றியும் புகைப்பதால் எற்படும் விளைவுகள் பற்றியும் யாவரும்
அறிந்திருப்பினும் இந்நிலை தொடர்பாக தெரிந்திருப்பினும் பாரிசவாதம் பற்றி
அறிந்திருப்பினும் புகைப்பவர்களை அதிலும் இளவயதினரை தாக்கும் இந்நிi தொடர்பாக
போதியளவு தெளிவின்மை காணப்படுகின்றது. அத்துடன் மட்டுமல்லாது பாரிசவாதத்தால்
தாக்கப்பட்டவர்க்கே அவரது மனநிலை தெரியும். பாதிக்கப்பட்டபின் ஞானம் வருவது என்பது
அவ்வளவுக்கு ஏற்படைய விடயமல்ல.
வருமுன் காப்பதே நன்று