Saturday, December 4, 2010

கண்களுக்கு கணினி எதிரியா?

கணினியில் நீண்ட நேரம் பணி புரிபவர்கண்டு.  கண்நோவுடன் சார்ந்தாக ஒரு தொகை கூட்டு விளைவுகள் உதைப்படுவதை பலரும் கூறியிருப்பர். கணினியின் முன் உட்சார வேண்டிய தேவை இருக்கின்றது. கண்வலி, தலைவலி, இப்படி நோய் நிலையும் காணப்படுகின்றது. இன்று மட்டும் தான் வலிக்கிறது என்றால் பறவாயில்லை.நாளையும் கணினி முன் அமர்ந்து ஆக வேண்டும் தொடர்ந்தும் எனின் வேலை….. இப்படியாக பரிதாப நிலை

தலைவலி என்று சொல்வதைவிட கணினியை கண்டாலே தலைவலி என்ற உணர்வு. இவ்வாறான துன்பத்தை உணருபவர் நம் சமூகத்தில் உள்ளனர். கணினி தொடர்பான கற்கைகள் பயில்வோர் மற்றும் கணினியில் தட்டெருத்தாளர் மற்றும் கணினி நீண்ட நேரம் பயன்படுத்துவோர் இந்த வகையினுள் இணையத்தள அரட்டையில் பொழுது போக்கும் பலரும் அடங்குகின்றனர்.

பொதுவாகச் சொல்லப் போனால் கணினியை அதிக நேரம் பயன்படுத்துவோர் என்ற பட்டியலில் எல்லாருமே அடங்கும் காலம் தான் இன்p உருவாகும் கணினியில் தேவைகள் அதிகரித்துவிட்டது, கணினிப்பயன்படும் அதிகரித்துவிட்டது…
கணினிப்பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் கணினி தேவைகளும் கூட அதிகரித்துவிட்டன. எனவே கண்களுக்கு வலி என்று கணினியை ஒதுக்க முடியாது அதற்காக கண்களை கெடுக்கவும் முடியாது.

கண் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதைப்பற்றி நாம் கவனிக்கும் போது அதன் பகுதிகள் எவ்வாறு நகர்கின்றன என பார்த்தால் தூரப்பொருளை பார்ப்பதற்கும், கிட்டப்பொருளை பார்ப்பதற்கு ஒளி மிக்க சூழலில் பார்ப்பதற்கு, ஒளி குறைந்த சூழலில் பார்ப்பதற்கு என்று பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் இவை. எல்லாம் கண்ணில் தானாகவே செயற்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக கமராவை யாவரும் அறிவோம் அதுவும் கண்ணைப் போன்ற ஒரு செயற்பாட்டு ஒற்றுமையை காண்பிக்கின்றது. நாம் கமராவில் கிட்ட உள்ள பொருளை படம் எடுப்பதற்கும், தூர உள்ள பொருளை படம் எடுப்பதற்கும் என்னமாற்றம் செய்கின்றோம் என்று அனைவரும் அறிவர் ணுழழஅ என்ற சொல்லையும் அறிவர்.

இதுபோல கமராவில் வில்லை அசைக்கப்படுகிறது தூர உள்ள பொருளை படம் எடுக்கும் போது வில்லை முன்னோக்கி நகர்கின்றது.

ஆனால் எமது கண்ணில் அப்படி வில்லையை நகர்த்த முடியாது. ஆனாலும் இவை எல்லாம் எவ்வாறு நடைபெறுகின்றன இங்கு கண்வில்லை. (லென்ஸ்)யின் தடிப்பே மாற்றப்படுகிறது. இதன் போது கிட்ட உள்ள பொருளையும், தூர உள்ள பொருளையும் பார்ப்பதற்கு ஏற்றவாறு கண்வில்லை தடிப்பை மாற்றிக்கொள்கிறது.

உதாரணமாக பாலுண் உதைப்பட்ட நிலையில் கோணவடிவாக இருப்பதாக கருதின் அதன் இரு அந்தங்களை பிடித்து இழுப்பின் அதன் வடிவம் நீள் கோளமாகும். நீள்கோளமாகும் போது அதன் தடிப்பு சற்று குறையும் அவ்வாறே கண்ணிலும் வில்லைகள் சில தசை நார்களால் இணைப்பட்டுள்ளன. இத்தசை நார்களே எமது பார்வையின் தூரத்திற்கேற்ப கண்வில்லையை ஈர்க்கின்றன இத்தசை நார்களை நாம் கவனத்தில் கொள்வோம்.

நாம் தொடர்ந்தும் மிகவும் கிட்டவுள்ள கணினித்திரையை பார்த்து கொண்டிருந்தால் அதற்காக அத்தசை நார்கள் தம்மைத் தொடர்ந்து பேண வேண்டும் அதனால் களைப்படைவதற்கு வாய்ப்புக்கள் உண்டு தானே. இவை செய்கின்ற வேலையின் அளவைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் கண்வலி வருவது நியாயம் என்றுதான் தோன்றும் நாமும் தொடர்ந்து கிட்டவுள்ள அதுவும் குறித்த தூரத்தில் உள்ள கணினித்திரையை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்க. இத்தசைகள் சிறிதும் ஒய்வில்லாமல் தமது தொழிலை செய்யமுடியுமா… அத்தசைகளாக எம்மைக் கற்பனை பண்ணிப் பார்த்தால் இச்செயற்பாடு பற்றி கோபம் தான் வரும் எனவே நாம் அவற்றிற்கு குறித்த நேரத்திற்கு ஒரு தடைவ ஓய்வு கொடுக்க வேண்டும். அதாவது ஒருமணி நேரத்திற்கு ஒரு தடைவ ஐந்து நிமிடமாவது தூர உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். ஜன்னல் ஊடாக தூரத்தில் உள்ள இயற்கைக் காட்சிகளை பார்த்தல் கூட ஒய்வாகவே அமையும்.

இதன் போது நாம் கண்களை சிமிட்டிக் கொள்வதும் மிகவும் ஏற்புடையது கண்கள் உலராமல் இருப்பதற்காகவே கண்கள் சிமிட்டப்படுகின்றன. நாம் கண் இமைக்காமல் சில மணிநேரம் உற்று நோக்கிய வண்ணம் இருந்தால் எமது கண்ணில் கண்ணீர் வரும் அது கண்ணை ஈரலிப்பாக்கும் இவ்வாறு நிகழாது போயின் கண் வரண்டு போகும் தூசு துணிக்கைகள் காற்றில் உள்ள கிருமிகள் கண்ணில் தாக்கி அழற்சியை உண்டு பண்ணும்.

கணினிப்பாவனை அதிகம் உள்ளவர்கள் தமது கண்களைப் பாதுகாத்துக்கொள்ள கணினிக்கு பாதுகாப்பு திரை இடலாம் இல்லாவிடின் குறித்த நேரகிடைவெளியில் சிறிது நேரம் தூர்ததுப் பொருட்களை பார்த்து கண்ணின் தசைகட்டு மாற்றம் ஒன்றை ஏற்படுத்தலாம் இவை தாண்டி தொடரும் பிரச்சினையாயின் கண் மருத்துவரை நாடலாம் எனவே

கணனிகள் கண்களுக்கு எதிரிகள் அல்ல அவற்றை பார்க்கும் விதத்தில் தான் உள்ளது. தொடர்ந்து உற்று உற்றுப்பார்ப்பதை தவிர்த்து கண்களிற்கு சிறிது ஓய்வு கொடுப்பின் கணனிகளால் ஏற்படும் ஊழஅpரவநச ஏளைழைn ளலனெசழஅந இலிருந்து விடுதலை பெறலாம்.

எனவே நாம் பார்க்கின்ற பார்வையில் தான் உள்ளது கணினி எதிரியா? நண்பனா? என்பது.