Saturday, January 15, 2011

சிஸேரியன் சிகிச்சையும் சில சர்ச்சைகளும்

சீசர் என்பது மக்கள் அறிந்த ஒரு சொல் மட்டுமல்ல மக்கள் மனங்களை உறுத்தும் சொல் என்றாலும் அது தவறில்லை சீசர் என்பது சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு வழங்கப்படும் யாவரும் அறிந்த சொல் என்றே கூறவேண்டும் இது பெரும் சத்திர சிகிச்சை வகைக்குரியது அதாவது major surgery
என்னும் வகைக்குரியது இது ஆபத்து மிக்கது இதைவிட காயப்பட்ட பகுதி மீள சீரமைக்கப்பட சாதாரண மகப்பேற்றை விட கூடுதல் காலம் தேவை இருப்பினும் இன்னும் பல எதிரான காரணங்கள் இருப்பினும்
கனேடியர்களுள் பலர் 2008 ஆம் ஆண்டில் தேவையற்ற சத்திர சிகிச்சைகளுக்கு பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளனர் என்று தேசியரிதியான ஆய்வொன்றின் முலம் தெரியவந்துள்ளது இதில் மேலும் நோயாளிகளுக்கு கிடைக்கும் பராமரிப்பு எப்போதும் முறையானதாகவோ அல்லது சிக்கனமானதாகவோ இருந்ததில்லை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் பிரசவத்திற்கான சிசேரியன் சத்திரசிகிச்சை மற்று முழங்கால் வலிக்கான சத்திரசிகிச்சை என்று தொடர்கின்றது கனடா சுகாதார தகவல் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் மேலும் இவற்றிற்பல வேண்டப்படாதவை என்றும் மானிலங்களிற்கிடையில் மாறுபட்ட கட்டணத்தை பெறுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இவ்வாறான பிரச்சனைக்கு முடிவு கான முடியாது விழிபிதுங்குகிறது கனடா என்றால் நாம் சொல்லவாவேண்டும். அது அந்த நாட்டு பிரச்சனை தானே தமக்கென்ன நம்ம கதவை தட்டினால் பார்ப்பம். இது எங்கள் சமுகத்தின் மனநிலை அவ்வாறே நாமும் கருதிக்கொண்டு நாம் சிந்தனையின்றி வாழ்ந்தது போதும் .
சிஸேரியன் சிகிச்சை பற்றி சிறிதேனும் அறிவோம் மருத்துவம் மூடுமந்திரம் என்பது பழைய கதை.அப்படியே சொல்லிக்கொண்டிருந்தால்  நம்சமுகம் இருளில் மூள்கிவிடும்
இச்சிகிச்சையானது திட்டமிட்டு செய்யப்படுவதும் உண்டு அதேபோல் அவசர தேவை நோக்கிலும் செய்யப்படுகின்றது திட்டமிடடு அமைபவை இதர நோய் மருத்துவ மற்றும் மகப்பேற்று காரணங்கட்கு அமைவாக அமையும்
முன்னய பிரசவம் சிஸேரியன் எனின் நடைமுறையில் நஞ்சுக்கொடி என்று அழைக்கப்படும் சூல்வித்தகத்தின் நிலை மற்றும் சிசுவின் அமைவு இருதய நோய்கள் இரட்டைக்குழந்தை  
இது போன்று அவசர தேவையை அடிப்படையாகக்கொண்டு
·        பிரசவம நீண்டநேரம் எடுக்கும் சந்தர்ப்பம் இதனால்
·         சிசு பாதிப்படையும் நிலை
·         நஞ்சுக்கொடி மகப்பேற்றின் முன் வெளித்தள்ளப்படின்;.
·          uterine rupture  கருப்பை கிழிவுறின் சாதாரணமாக நிகழ்வது அரிது எனினும் முன்பு சிஸேரியன் சிகிச்சை செய்யப்பட்டிருப்பின் சாத்தியக்கூறு அதிகம·        ·         increased blood pressure (hypertension) in the mother or baby after amniotic ruptureமேலும் தாயில் உயர்குரதியமுக்கம் எற்பட்டது பன்னீர்க்குடம் உடைந்த நிலையில் எனின் அல்லது தாயின் நாடித்துடிப்பு அதிகரித்திருப்பின்
·         சிசுவின் நிலை
·         சிசுவின் பருமன் மற்றும்
·         நஞ்சுக்கொடி சிதைவுறின் அல்லது
·         துண்டப்பட்ட பிரசவம் தவறும் போது மேலும்
·         தாயின் இடுப்பு அமைவு
·         தாய் பாலியல் தொற்றுடையவராயின்
·         pre-eclampsia போன்ற நிலைகளில் அமையலாம் இதைவிட வளர்ச்சியடைந்த நாடுகளில் வலியறியாத பிரசவத்திற்காகவும் பாலியல் ரீதியான செயற்பாட்டிற்கு சிஸேரியன் சத்திர சிகிச்சையின்பின் விரைவில் தயாராவதற்கும் எற்றதாக அமைவதால் அதாவது வயிற்றை வெட்டி சிசுவை எடுப்பதால் இனப்பெருக்கச்சுவடு பெரிதும் தளர்வுறாது என்பதால் மேலைத்தேயத்தில் வரவேற்பு உண்டு. எனினும் யோனி வழிப்பிரசவத்தின் போது சிசுவின் உடல் பயணிக்கும்போது இனப்பெருக்கச்சுவட்டின் சுவர்களினால் அமத்தப்படுவதனால் சுவாசப்பை மற்றும் மண்ணீரல் போன்றவை நசுக்கப்படுவதால் சுவாசப்பையில் நீர்தேங்கி பிற்காலத்தில் சுவாச நோய்கள் எற்படாது துடக்கப்படுகின்றது இதைவிட குருதி மாற்றீடு செய்வதற்கான சந்தரப்பமும் எற்படும் ஆபத்து காணப்படுகின்றது  இவற்றைவிட கிருமித்தொற்றிற்காக எதிர்ப்பு மருந்தேற்றுவதற்கு அதிககாலம் வைத்தியசாலையில் தங்கவேண்டி எற்படும் நிலையும் உண்டு இவற்றை எல்லாம் விஞ்சி அடுத்து வரும் பிரசவங்களில் கருப்பை கிழிவுறும் என்பது சற்று கருத்துன்ற வேண்டிய விடயம் என்றே சொல்ல வேண்டும்   எது எவ்வாறு இருப்பினும் 39 வாரங்களின் முன் சிஸேரியன் சத்திர சிகிச்சை  பெரிதும் எற்புடையதல்ல சிலசமயங்களில் விலகலுறலாம்
இங்கு சிஸேரியன் சிகிச்சை பற்றிய ஒரு தெளிவு மக்களிற்கு எற்படவேண்டும் அதைவிட நகரங்கள் மட்டு வளர்ச்சியடைவதை காட்டிலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் பிரதேச வைத்தியசாலைகள் வசதியுறவேண்டும் பிரதேசவைத்தியசாலைகள் குற்றுயிரய்போகின்ற போது மக்கள் நகரை நாடிவந்து மிகையளவு பணத்தை செலவு செய்வதும் தவிர்க்கமுடியாதே உள்ளது