
முரசில் ஏற்படும் அழற்சியாலும் அதன் ஊடு முரசில் பற்களில் படியும் படிவுகளினால் அதாவது பற்சுத்தம் பற்றி மிதமான கவனிப்புடன் உள்ளபோது ஏற்படலாம் இவை தவிர இவற்றின் தொடர் விளைவுகளாலும் தாடை என்பு வரையான கிருமித்தாக்கங்களினாலும் ஏற்படுகின்றது….. இவற்றைவிட சில விற்றமின் குறைபாடுகள் ஏவையஅin முஇ மற்றும் ளுஉரசஎல ஸ்கேவி நோய் போன்றவற்றுடன் மகப்பேற்றுக் காலங்களில் கற்பிணிகளிலும் ஏற்படுகின்றது.
சில உயர்குருதியமுக்கத்திற்கு பயன்படும் மருந்துவகைகளும் முரசுகளின் மிகை வளர்ச்சியை தூண்டுகின்றன இவற்றின் போது பற்சுத்தம் தொடர்பில் போதிய கவனம் இல்லாத விடத்திலும் முரசுகரைதல் நிகழலாம்.
இவை இவ்வாறிருக்க சில குருதி உறையா நோய்களிலும், குருதி சார் புற்றுநோய்களிலும் முரசுகரைதல ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
பற்சுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் முரசுகரைதலை முறையான பற்சுத்தம் செய்யும் செயன்முறையை பல்மருத்துவரிடம் இருந்து கேட்டு அறிந்து கொள்ளலாம்.
எனினும் நாம் குருதிப்புற்று நோயை இனம் காணத்தவறி விடுவோமானால் மிகப்பெரிய பாதக விளைவை எதிர்கொள்ள வேண்டியே ஏற்படும். இங்கு நாம் கருதும் குருதிசார் புற்றுநோய் குருதி மற்றும் என்பு மச்சையில் ஏற்படுகின்றது இதன் போது குருதிக்கலங்களின் அசாதாரண பெருக்கமும், உருவவியல் குறைபாடுகளும் ஏற்படுகின்றன என்றே கூற வேண்டும். இவ் குருதிசார் புற்றுநோய் (டுநரமநஅயை) நான்கு வகைப்படும். இது அவற்றின் தீவிரத்தன்மையை துரித கதியில் அடைவதையும் அவற்றின் தோற்றுவாய் எது என்பதையும் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.
இது உயிர்கொல்லும் வுழி 10 புற்றுநோய் வரிசையில் இருப்பினும் இளநிலையிலே இனம் காணப்படின் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல குணப்படுத்தலாம் என்றே கூறமுடியும் அவ்வளவுக்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடிய ஒரு புற்றுநோய் என்பது இது தொடர்பாக உள்ள இதன் ஒரு நல்ல குணவியல்பு ; என்றே கூறவேண்டும்.
எனினும் இளநிலையிலேயே இனம் காணத்தவறி உக்கிர நிலையை அடையும் போது இதன் விளைவாக குருதியில் அசாதாரண கலங்கள் பெருக்கமடைகின்றது அத்துடன் குருதியில் போசனை, ஒட்சிசன்காவும் செங்குருதிக்கலங்கள் எண்ணிக்கையும் குறையும் இதனால் குருதிச் சோகை ஏற்படும். இதைவிட வெண்குருதிக்கலங்களின் எண்ணிக்கை குறைவும் புதிதாக உருவாகும் கலங்கள் நோய்எதிர்ப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதவையாகவும் காணப்படுவதால் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் தன்மை அதிகரிக்கும் இத்தோடு குருதியில் காணப்படும் குருதி உறைதல் அதாவது காயம் ஏற்படும் போது குருதிஉறைவை ஏற்படுத்தும் குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையும் குறைவுறுவதால் குருதிஉறைதல் தடைப்படும் இதனால்….. முரசில் காணப்படும் மயிர்த்துளைக் குழாய்கள் தாக்கப்படும் போது குருதி கசிவு ஏற்படும் இதன் விளைவாக முரசு கரைதல் ஏற்படும்.
இவ்வாறு குருதிசார் புற்றுநோய் வெளிக்காண்பிக்கப்படுகின்றது. இதனை இதன் இளநிலையிலேயே இனம் காண்பது இதற்கான சிகிச்சையின் வெற்றியை தீர்மானிக்கின்றது. இக்குருதிசார் புற்றுநோய்கான தோற்றுவாய்க் காரணங்களாக சிலவகை இரசாயனப் பொருட்கள் குறிப்பாக டீநணெiநெ மற்றும் சிலவகை பிறவிக்குறைபாடுகள் னுழறளெலனெசழஅந இவற்றைவிட சிலவகை வைரசுத் தொற்றுக்களின் போதும் ஏற்படலாம் இவை எல்லாவற்றையும் விஞ்சி புகைத்தல் என்பது இதை துரிதப்படுத்தும் காரணியாகவே உள்ளது. அதாவது உயிர்ப்பற்ற புகைத்தல் அதாவது பெரியவர்கள் புகைக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் சிறுவர் சிறுமிகளும் இந்நோய்க்கு ஆளாகின்றனர்.
முரசுகரைவதை அலட்சியம் செய்வதை தவிர்ப்பதன் மூலம் குருதிசார் புற்றுநோய் போன்ற தீயநோய் நிலைகளை இனம் காணலாம். இளநிலையிலேயே இனம் காண்பதால் புற்றுநோயை வெற்றி கொள்ளலாம்