Saturday, December 4, 2010

நீரிழிவு நோயாளிகட்கு இனிப்பென்றால் எதிரியா.

அன்றாடம் நீரிழிவு நோயாளிகள் என்று பார்க்கப்போனால் மருத்துவ கிளினிக்கில்; அரைவாசியை விஞ்சியவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாத நிலை மற்றும் விசேட நிலைகளை அவதானிக்க நீரிழிவுக்கென்றே தனி கிளினிக் ஜபினிஆய்வநிலையம் ஸ ;அதைவிட கண்காட்சிகள் இப்படி எல்லாம் அதன்பால் கவன ஈர்ப்பை தூண்டுகின்றது. இங்கே நீரிழிவு நோயாளியின் உணவுக் கட்டுப்பாடு என்று கூறிவிட்டு அட்டவணை போட்டுக் கொண்டால் போதாது. நோயாளியின் மனம் என்பது தான் இங்கு கருதப்பட வேண்டியது.

     நீரிழிவு நோயாளிகட்கு இனிப்பு சாப்பிட எண்ணம் அதிகம் என்று தான் கூற வேண்டும். அனேகமான நோயாளர் இனம் காணப்பட்டு சில காலங்கள் வரை கட்டுப்பாடான உணவை கொண்டிருப்பினும் சிறிது சிறிதாக கால ஒட்டத்தில் கட்டுப்பாட்டை தளர்த்தி விடுவதே வழமை என்றநிலை காணப்படுகின்றது. நாம் வெளியில் இருந்து கொண்டு பார்ப்பது சுலபம் ஆனால் நோயாளியின் மனநிலை நோயாளிக்குத்தான் தெரியும்.

     நீரிழிவு நோயாளிகட்கு வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சீவிப்பதா? என்ற விரக்தி காணப்படுகிறது ஆசைக்கு எதுவும் சாப்பிட முடியாது என்ற கவலை அப்படி ஒரு “துறவறம்” என்ற எண்ணம், அதுபோக இன்சுலின் மருந்தேற்றும் நோயாளி என்றால்……………. நாம் சுகமாக நினைக்கலாம் ஊசியை ஏற்றிக்கொள்வது தானே. என்று ஆனால் நமக்கு நாமே ஊசியை ஏற்றும்போது அதுவும் நோய்பற்றிய விரக்தி கவலை இவற்றுடன் என்றால் அது அனேக நோயாளிற்கு இதயத்தில் தான் வலியை உண்டுபண்ணும் தினம்தோறும் தவணைமுறையில். ஏன்ரே கூறவேண்டும்

     இவ்வாறு வலிசுமக்கும் நோயாளியை மருத்துவர் “கடவுளின் அடுத்த படி” எசுவதென்றால்…………….. நோயாளிகள் மருத்துவர் அளவிற்கு படித்துவிட்டு வருவதில்லை அவ்வளவு படித்திருந்தால் மருத்துவரிடம் வரமாட்டார்கள் இன்னும் மருத்துவம் மூடு மந்திரம் என்ற நிலை நம் சமூகத்தில் இருந்து அகலவில்லை. இவ்வாறான இருநிலை நிலைகளும் நோயாளியை மருத்துவரிடம் இருந்து அன்னியப்படவே செய்கின்றது. நோயாளி மருத்துவரிமிருந்து அன்னியப்பட்டால் நோயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அது ஒரு விசவட்டமாக நகரும் என்றுதான் சொல்லவேண்டும்.

     நோயாளிகள் பலருக்கு இனிப்பு சாப்பிடுவதென்றால் அலாதிப்பிரியம் என்றுதான் சொல்ல வேண்டும் சில வகை இனிப்புகளை உட்கொள்ள முடியும் என்றால் இவர்கள் மனங்களில் ஏற்படும் சந்தோசமும் அதிகம் நீரிழிவு நோயாளிகள் எல்லோருக்கும் இலகுவாகக் கிடைக்கு இனிப்பு சீனி இதை “விளையாட்டுப் பிள்ளைகள்” போல் கள்ளமாக உட்கொள்வதில் கொள்ளை இன்பம் இருக்கிறது. இவர்கட்கு சீனி எதிரி என்றல்ல துரோகி என்றே கூறவேண்டும். ஆனாலும் இனிப்பு வகையில் இனிய நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள் இவ்விடயம் மக்கள் கண்ணில் படுமாயின் அவர்கட்கு மகிழ்ச்சியான தொருவிடயமாகவே இருக்கும் அத்துடன் கட்டுக்கடங்க மறுக்கும் உணவுக்கட்டுப்பாட்டில் ஏற்படும் கடினத்தன்மையை சீர்செய்வதும் எளிமையாகீவிடும்…. அத்தோடு இவர்கள் மனதில் உள்ள ஒரு முக்கிய கவலை நீங்கிவடும். இதனாலும் இவர்களது நோயின் தீவிரத்தையும் குறை;வுறும் ஏனெனில் கவலைப்படுவதால் உடல் இரசாயனவியல் மாற்றங்களினூடு நீரிழிவை கட்டுப்பாட்டில் இல்லாது போக செய்கின்றது.

     யுளிசவயஅநஇ ளுயஉஉhயசinஇ ளுரஉசயடழளந நெழவயஅநஇ யஉநளரடகயஅந pழவயளளரைஅஇ ளவநஎயை.இன்னும் ஐளழஅயடவஇ ஆயடவவைழடஇ ஆயnnவைழட ளழசடிவைழட இப்படியே ஓலடவைழைட என்று நீண்டபட்டியல் உள்ளது இவர்கள் இனிய நண்பர்கள் என்பது பலருக்கு தெரியாது. இவ்விடயம் இவர்களின் குருதியில் வெல்லக்கட்டுப்பாட்டை ஏற்படுத்த மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

     மேலும் ஒரு சந்தர்ப்பத்தை கருதி நோயாளிகளின் உடலில் புண்கள் இருப்பின் அவற்றில் கிருமித்தாக்கம் இருக்கும் இதன்போது குருதியின் வெல்லக்கட்டுப்பாடு என்பது மிகக்கடினம். அவ்வாறே குருதியில் வெல்லம் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் புண்கள் மாறாது எனவே ஒன்றை ஒன்று ஆள்கின்ற தன்மை காணப்படுகின்றது இவற்றை கருதும் போது நோயாளியின் உணவுக்கட்டுப்பாடு மருந்துகளை கொண்டு ஏற்படுத்தும் கட்டுப்பாடு இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் இங்கே நோயாளியின் உணவுக்கட்டுப்பாடு என்பது நோயாளியின் மனதில் ஏற்படும் ஒருபெரும் விடயம் இது சரிவர அமையாதவிடத்து மருந்துகளால் என்ன மந்திரத்தால் கூட மாங்காய் விழுத்துவது சாத்தியமில்லை. ஆகவே நோயாளியுடனான அன்னியோன்னியம், நட்புறவு மிகவும் தேவையானது அதைவிட புரிந்துணர்வு மிகமிகத் தேவையானது.

     புரிந்துணர்வு என்னும் போது டால்ஸ்ராயின் கருத்துப்படி “பிரச்சினையை நமது கண்களினூடாக பார்ப்பதல்ல பிரச்சினையைக்குட்பட்டிருக்கும் குறித்த நபரின் கண்ணினூடாக பார்ப்பதே” என்று தான் செல்ல வேண்டும்.

     இவ்வாறு புரிந்துணர்வுடன் மருத்துவம் செயற்படின் நோயாளிகள் மனதில் மகிழ்ச்சி நிலவும் அதுவே பெருமருந்தென்று கூறலாம். இந்த வகையில் நோயாளிகளின் மனதில் மகிழ்ச்சி நிலை கொள்ளும் விதமாக நோயாளிகட்கு பயன்படுத்தத்தக்க இனிப்பு வகைகளை அறிமுகம் செய்வது அவர்களின் மனங்களில் ஒருபெரும் பகுதியில் இருக்கும் கவலை விரக்தியை நீக்கி நாமும் சுகதேசிகள் போன்று உள்ளத்தில் ஒரு தென்பை ஏற்படுத்துவது என்பது உலகத்தில் பெரும் மருந்தாகவே கணிப்பிடப்படும்.