Saturday, December 4, 2010

மருந்து வில்லைகளுடு மட்டும் தானா மருத்துவம்

       எமது சமூகத்தில் தற்போது குறித்த வயது எல்லையை தாண்டினால் டாக்கடரை நாடி
செல்பவருக்கு ஏதாவது நோய் ஒன்று இருப்பதாக அடையாளம் இட வேண்டிய தேவை உள்ளது.
இல்லாது போனால் டாக்கடர் தரமற்றவர் என்று ஒரு புதிய கலாச்சாரம் காணப்படுகிறது.
இவற்றை எல்லாம் விஞ்சி உறவினர் காணும் போது கூட மக்கள் எனக்கு இன்ன இன்ன
நோய்கள் இருக்கிறது.; உங்களுக்கு எப்படி என்று கேட்கும் நிலைதான் சுகம்
விசாரித்தல் என்று அர்த்தப்படுவதாக உருவாகிவிட்டது.
       பொதுவாக குறித்த வயதின் பின் ஏதாவது ஒரு நோய் இருப்பதாக கூறி அதற்காக
வைத்தியசாலை செல்வது அத்துடன் ஏதேனும் மருந்து எடுப்பதாக சொல்வது தான் நாகரிகம்
என்று சொல்கின்ற நிலை..
       இவ்வாறான மக்கள் கட்டிடத்தை வியாபார நோக்கங்களில் நகரங்களில் அணுகுவதற்கு
மருத்துவ மனைகள் தயாராகிவிட்டன. இங்கு மருத்துவம் மூடுமந்திரம் என்ற நிலை இன்னும்
காணப்படுகின்றது. நவீனமருத்துவ உலகின் போக்கினைப் பார்த்தால் மருந்துகளை
நோக்கி செல்வதாக அன்றி வாழ்க்கை முறை மாற்றங்களையே நாடிச் செல்கின்றது.
       சுருக்கமாக கூறின் எடுத்த எடுப்பிலேயே மருந்துகளை அள்ளி வழங்கிவிட நவீன மருத்துவ
சிந்தனைகள்தற்போது சிந்திப்பதில்லை. அதற்கு பதிலாக வாழ்க்கை முறையை
வடிவமைக்கும் விதம் பற்றியே அதிகம் கவனம் கொள்கின்றது. எடுத்த எடுப்பிலே
மருந்துகளை பாவிப்பதை தவிர்க்கும் வண்ணமே இவை நகர்கின்றன. ஏனெனில் எமது
வாழ்க்கை முறையில் காணப்படும் சிதைவுகள் பற்றியே கவனத்தில் கொள்ள வேண்டும்.
       புகைத்தல், மது ஆரோக்கியமற்ற உணவு முறை பருமனை உடலமைப்பு, உடற்பயிற்சி அற்ற
தொழில்முறை மன அழுத்தத்தை அதிகரிக்கும் விதமான நட்புக்கள் இவ்வாறு
அமைந்துவிட்ட சிதைவுகள் பல நம் வாழ்வில் காணப்படுகின்றன.
       புகைத்தல் மூலம் ஏற்படும் தீமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். உயர்குருதி
அமுக்க நோயுடைய ஒருவரை எடுத்து கொண்டால் புகைத்தல், மதுவருந்துதல் உணவுப்
பழக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றன ஆபத்தை உண்டு பண்ணும் காரணிகளாகவே
உள்ளன.
       இவற்றின் ஊடு பாரிசவாதம் வரை செல்லக் கூடிய நிலையை உண்டு பண்ணுகின்றன. உடல்
எடை அதிகரித்தல் மற்றும் உடற்பயிற்சிஇன்மை உணவு ஆரோக்கியமற்ற தன்மை
இவையாவும் ஒன்றில் ஒன்று தங்குகின்றன. இவற்றினூடு உடலின் கொழும்பு சேமிப்பும்
அதன் அளவுடன் சில வகை ஓமோன்களின் செல்வாக்குஇதனுடு மாரடைப்பு ஏற்படும் வீதமும்
மாறுபடு;கின்றது.
       இவ்வாறே எமது சூழலில் மன அளைச்சல் அதிகரித்துவிட்டது பொதுவாகி எந்த
பிரச்சனைக்கும் அன்றைக்கு என்ன தீர்வு என்Nறு நிலைக்கும் அளவுக்கு சிந்தனைத்
திறன் குறைவடைந்துவிட்டது. பிரச்சினைகள் பற்றி கூறி முடிவெடுக்க நினைக்கும் ஒருவர்
தொழில் தானங்களில் உயர் அதிகாரிகளிடம் பிரச்சினையுடன் தீர்வையும் சுமந்து
செல்ல வேண்டிய பரிதாபநிலை அத்துடன் உடனடித் தீர்வாக மன உளைச்சலை அதிகரிக்கும்
விதத்தில் ‘ஆப்பு’ வேலைகள் இப்படி ஒரு விச வட்டத்துள் மனஉளைச்சல் செல்கின்றது.
இவற்றுக்கு தீர்வாக தியானம், யோகாசனம், நூல் வாசிப்பு இவை எல்லாம் அருகிப்
போய்விட்டது.
       தற்போதைய மருத்துவ ஆய்வுகள் இவற்றையே கருத்திற் கொண்டு தமது போக்கை
மாற்றிச் செல்கின்றன. உதாரணமாக குருதியமுக்கம் உயர்வாக காணப்படுகிறது என்றால்
உடனே மருந்தினுள்.
       மருத்துவ உலகம் குதிக்கவில்லை தொடர்ந்து குறிப்பிட்ட கால அளவு வரை
குருதியமுக்கத்தை அளவிட்டு பார்க்கிறது. அதன்பின் சில வாழ்க்கை முறையில்
மாற்றங்களை உருவாக்குகிறது. மருந்துப் பாவனை என்று தொடங்கினால் இடையில்
நிறுத்தாமல் வாழ்நாள் பூராகவும் உபயோகிக் வேண்டி ஏற்படலாம் என்று மருத்துவ
உலகம் கவலை கொள்கிறது. இதனால் ஆபத்தற்ற, பக்கவிளைவற்ற உணவு அமைப்பு
மாற்றம், உடற்பயிற்சி மன அழுத்த குறைப்புக்கு தியானம், யோகாசனம் என்று
நகர்கின்றது.
       இவ்வாறே மருத்துவ ஆய்வுகளும் எல்லாத்துறைகளிலும் நகர்கின்றன. அண்மைக்கால்களில்
டீசவைiளா அநனiஉயட துழரசயெட வெளியான தகவலில் தற்கொலைகளை மனஅழுத்தத்திற்கு
பாவிக்கும் மருந்துகள்சில இளவயதினரில் கூட்டுவதாக ஆய்வு கற்கைகள் கூறுவதாக
தெரிவித்திருந்தது. எமது சூழலில் போரின் விளைவாக அதனூடு தன்னம்பிக்கை
தளர்வுகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இவ்வேளையில் ஆற்றுப்படுத்தல் போன்ற
ஆபத்தற்ற செயன்முறைகள்மேலும் விரிவு படுத்தப்பட வேண்டும் சில வருடங்களின் முன்
பேராசிரியர் தயா சோம சுந்தரம் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு மிகவும்
திறம்பட ஆற்றுப்படுத்தலை மேற்கொண்டு வந்தமை மெச்சத்தக்க விடயமே ஆகும்.
       இவ்வாறு மருந்து மாத்திரைகள் மட்டும்தான் தீர்வல்ல. உடல், உணவு, ஆரோக்கியம்,
உள ஆரோக்கியம் அது தாண்டிய நிலையில் மருந்துகள் என்றாகிவிட்டது மருத்துவத்தின்
போக்கு… மனதும் ஒரு மருந்து தான்