Saturday, December 4, 2010

மேலைத்தேய நாகரிகத்தால் வாலிபத்துடன் வற்றிப்போகும் வாழ்வு

     மேலைத்தேய நாகரிகத்தின் ஆளமைக்குள் எமது சமூகமும்; மெல்ல மெல்ல நகர்வதை நாம் காண முடிகின்றது. நகரப் புறங்களை அண்டிய பகுதிகளில் காதல் மற்றும் காதலை அண்டியதாக மேலைத்தேய பாணியில் அமைந்த (னுயவiபெ) பொழுது போக்கு வாழ்க்கைமுறை இளவயதினரை மிகவும் கவர்ந்து வருகின்றது.

     இவ்வாழ்க்கை முறை எமது சமூகத்தினுள்ளும் நுழைகின்றது. இது பற்றி கவனம் செலுத்த வேண்டிய தேவை யாவருக்கும் உரியதே சினிமாப்பாடல்கள் தொடக்கம், சின்னத்திரை வரை காதலை மையமாகக் கொண்டே நகர்கின்றது. அது மட்டுமல்லாது பாடல்வரிகள் கூட மீசைவைத்த செடிகொடியா? ஆசை உனக்கில்லையா என்று உசுப்பேத்துவனவாகவே அமைகின்றன. இவை தாண்டி ஒரு கொக்கோகோலாவில் இரு குழாய் வைத்து என்று தீயை மூட்டும் தன்மையைத்தான் காண்பிக்கின்றன.

     மனித வாழ்க்கைக் காலத்தை பார்ப்பின் எண்பது வயது வரையும் வாழும் பெண்ணை எடுத்துக் கொண்டால் இவரது வாழ்வில் உதாரணமாக பாலியல் ரீதியாக உச்சதொழிற்பாட்டை 30-45 வரையில் கொண்டிருப்பினும் மிகுதியான காலம் சுமார் 35 வருடங்கள் மந்தமான அதாவது பாலியல் செயற்பாட்டின் செயற்திறன் குறைவடைந்து உள்ளதை அறியலாம்.

     இது எவ்வாறு இருக்க மேலைத்தேய வாழ்க்கை முறை பாலுணர்வுகட்கு தீனிபோடுவதாக அன்றி விருந்து கொடுப்பது போன்ற விதமாகவே உள்ளது. இதனூடு கருக்கலைப்பு, பாலியல் நோய்கள், பெற்றோர் அற்ற சிறுவர்கள் வாழ்க்கைத் துணை அற்ற பெண்கள் என்று மிகவும் பாரதூரமான பக்கங்களையே நமது நாட்டில் உருவாக்கிச் செல்கின்றது. இவை மேலும் விபச்சாரம் சிறுவர் துஷ்பிரயோகம் என்று பெரும் விசவிருட்சங்களையே ஆணிவேருடன் மண்ணில் நிலைகொள்ளச் செய்கின்றன.

     மேலும் எது சரி எது தவறு என்று கூற முடியாத அளவுக்கு தவறுகளையே கலாச்சாரமாக மாற்றும் ஈர்வையே உள்ளது. உலகமயமாதல் என்று கூறிக்கொண்டு கிராமத்தை விட பிற்பட்ட ஒரு வாழ்வு அதாவது கிராமப்புறங்களில் முன்பு அடிதடி, விபச்சாரம் என்பன காணப்பட்டன. எனினும் அவை தற்போது நாகரிகம் மிக்கவர்கள் என்று கூறிக்கொண்டு நகரவாழ்வில் அடிதடி ரவுடிஷம் என்றும், விபச்சாரம் னுயவiபெஇ டுiஎந வழபநவாநச என்றும் பெயர் கொண்டு அன்பு, பண்பு, பாசம், அர்ப்பணிப்பு, விட்டுக்கொடுப்பு எல்லாவற்றையும் சிதையேற்றி தீ வைக்கும் மேலைத்தேய வாழ்க்கைமுறை.

     ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் ஏற்புடையது என்று நோக்கு போது மனதை உறுத்துவதாகவே உள்ளது. ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் ஏற்புடையது என்று நோக்கும் போது மனதை உறுத்துவதாகவே உள்ளது ;ஒரு பெண்ணின் ஆயுட் காலம் 45 வயதுடன் முடிவடையும் என்றால் மேலைத்தேய வாழ்க்கை முறையை வரவேற்று அதற்கு விருந்து வைக்கலாம் எனினும் அவ்வாறில்லை ஒரு பெண்ணின் ஆயுட்காலம் 80 வயது எனக் கொள்ளின் 45 வயதின் பின்னான காலம் வெறுமையாகவே காணப்படும். இதைவிட மேற்படி வாழ்க்கைமுறையைபெரிதும்  கையாளும் வர்க்கம் பாலியல் தொழிலாளர்கள் என்றே கூறலாம் இவர்கள் தமது ஆயுட்காலத்தின் பிற்பகுதியை தனிமையிலும் வறுமையிலுமே கழிக்கின்றனர்.

             ஒரு ணெ;ணின் உடற் தொழிற்பாட்டை எடுத்து நோக்கும் போது மாதவிடாய் என்பது முக்கியம் பெறுகின்றது. அதுபோல மாதவிடாய் நிறுத்தம் என்பதும் அதைவிட முக்கியம் பெறுகின்ற ஒரு விடயமாகும். இதன்பின் (மாதவிடாய் நிறுத்தத்தின்) ஒரு பெண்ணின் உடல், உள ரீதுpயாக பல அசௌகரியங்கள் உணர ஆரம்பிக்கப்படுகின்றன. இவை Pழளவ அநnழியரளயட ளலனெசழஅந எனப்படும். அதாவது…
     உளரீதியாக…
•         பதற்றமடையும் தன்மை,
•         மனதில், ஆறதலின்மை,
•         தூக்கமின்மை,
•         எதிலும் கவனம் செலுத்த முடியாமை,
•         மனதளர்ச்சி,
•         இலகுவில் சினமுறல்,
•         நெருக்கீட்டு தாக்கங்கள் மற்றும்

     உடல் ரீதியாக..
•         அதிககளைப்பு,
•         மூச்செறிதல்,
•         உடல் நிறை அதிகரித்தல்,
•         உடல் உஷ்ணமாகி இருத்தல்.
•         அத்துடன் சிலருக்கு உடலில எரிவு இருப்பதாக உணர்தல் இவற்றோடு
    பாலியல் ரீதியாக…
•         பெண் உறுப்பின் நெகிழ்தன்மை குன்றல் வரட்சியடைதல் போன்றவற்றுடன்
•         உடலுறவிற்கு தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் போன்றன ஏற்படும் இவற்றூடு பார்க்கின்ற போது மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முறையானது பெண்களைப் பொறுத்த மட்டில் மிகவும் எல்லைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. மேலும் பெண்ணின் பாலியல் ரீதியான உடற்தொழிற்பாடும் மாதவிடாய் நிறுத்தத்துடன் ஏற்படும் ஓமோன் பற்றாக்குறையால் எல்லைப்படுத்தப்படுகிறது. இதனால் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆண் துணையை தேடும் மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முற்றுப்புள்ளியை நோக்கி நகர்வதுடன் இவ்வயது எல்லையின் பின் அவர்கள் தமக்கு அன்பையும், பாதுகாப்பையும் வழங்கக் கூடிய துணையையே எதிர்பார்க்க தொடங்குகின்றனர். இவர்கள் இந்நிலையை அணுகும்போது இவர்களின் வாழ்க்கை முறையால்.. இவர்களை கவனிக்க குழந்தைகள் கூட இல்லாத நிலையிலும் இவ்வாழ்க்கை முறைக்கு பழகிப் போன ஆண்கள் இளம் யுவதிகளை நாடுவதாலும் இன்னும் டுiஎந வழபநவாநசஇ னுயவiபெ போன்றவை குடும்ப வாழ்க்கை முறை, திருமணம், குழந்தை என்னும் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொளளாத ஒரு தன்மை உடையதால் இவ்வாழ்க்கை முறையினூடு குறித்த வயதெல்லையின் பின் தாமாகவே அனாதைகளாக்கப்படுகின்றனர்.

     இவ்வாறான வாழ்க்கை முறையின் தன்மையை அறிந்தும் அறியாமல் நம் சமூகத்தில் நகரை அண்டிய கற்றவர்கள் பெரிதும் தமது தொழில் நிமித்தம் உதாரணமாக நகரத்தில் தொழில் புரிவோர் ஒரு பெண்ணும் ஓர் ஆணும் சேர்ந்து தமது செலவுகளை பகிர்ந்து கொண்டு வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதும் பின் இவர்களில் எவராவது ஒருவர் வேலையில் இடமாற்றம் பெறின் புதிய இடத்தில் அவ்வாறான வாழ்க்கையை அமைப்பதும், புதிய துணையை தேடிக்கொள்வதும் என்று டுiஎந வழபநவாநச வாழ்க்கை முறையும்.

     பாலியல் தேவைகளுக்கு தீனிபோடும் னுயவiபெ வாழ்க்கை முறையும் … குறித்த வயதெல்லையின் பின் வரண்டு போய் விடுகின்றது….அதாவது வாலிபத்தின் காலம் முடிவுறுவதுடன் என்றே குறிப்பிட வேண்டியுள்ளது.