Saturday, December 4, 2010

மதுப்பிரியர்களின் முகங்களில் மிளிர்வது அழகா?

 மது அருந்துபவர்களை தவறானவர்கள் என்பது தவறு.  எமது சமூகத்தின் தவறான எண்ணங்கள், விளம்பரங்கள் இவைதான் இவர்களைத் தவறானவர்களாக்குகின்றன.    அழகுமெருகேறும், உடல் ஆரோக்கியம் பெறும் என்ற தவறான எண்ணத்தில் கல்லூரி, விடுதி மாணவிகள் மத்தியில் பியர் குடிக்கும் பழக்கம் தலைதூக்கியுள்ளது.  பார்ட்டி என்ற பெயரில் நடக்கும் இந்த மதுபான விருந்து கலாசாரச் சீரழிவுக்கு வித்திட்டுள்ளது.  
     மதுவின் பின்னால் ஆண்கள் மட்டுமே சென்று கொண்டிருந்த காலம் போய் இப்போது இளம் பெண்களும் செல்லத் தொடங்கியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் நம் நெஞ்சை உறைய வைக்கச் செய்கின்றது.

இத்தகவல்  நெஞ்சை உறைய வைப்பதாக மட்டும் இல்லை. எமது சமூகத்தின் உட்கட்டுமானத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கும் ஒரு நிகழ்வு என்றே கூற வேண்டும். பெண்கள் மதுவில் மயங்குவது என்பது ஒட்டு மொத்த சமூகத்தையும் ஒரே விசையில் ஆதாழ பாதாளத்துள் அப்படியே தள்ளிவிடுவதாகவே உள்ளது.  மதுப்பிரியர்களாக ஆரம்பித்து அடிமைகளாக மாறுவதுதான் நியதி.  அதில் மாற்றம் ஏதுமில்லை என்றே கூறவேண்டும். 

இவர்கள் மூலம் உருவாகும் நாளைய தலைமுறையும் பாவம் அறியா வயதிலே கருவிலே மதுவினால் பாதிக்கப்பட்டு குறைபாடுகள் நிறையப் பெற்ற குழந்தைகளாகப் பிறக்கின்றனர். 

இவை யாவற்றையும் தாண்டிஈரல் என்ற உறுப்பு பற்றி சமூகத்தில் அதிகம் பேசப்படுவதுண்டு.  அதுவும் மிகவும் எளிமையாகவும் இலகுவாகவும் ஈரல் கருகிப் போய்விட்டது என்று.  எமது மக்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது மிகக் குறைவென்றே கூறலாம்.  ஈரல் என்பது என்ன செய்கின்றது என்று நோக்கின் அதன் தொழிற்பாடு என்ன ஈரல் பாதிக்கப்பட்டால் விளைவு என்ன என்பது பற்றி எல்லாம் அறியாமல் இவ்வாறு கூறுகின்றரோ தெரியாது.  ஒரு ஈரல் பாதிக்கப்பட்டவரை அவரது உயிரைத் தக்கவைப்பது என்பது…. ஒரு மிகப் பெரியதொரு கடினமான விடயம் என்பது வைத்தியருக்குத்தான் தெரியும். 

ஈரல் பாதிக்கப்பட்டால்p மருந்துகள் பலவற்றைப் பயன்படுத்த முடியாது.  ஏனெனில் ஈரல் தொழிற்படின் மட்டுமே அனேகமான மருந்துவகைகள் உடலில் உள்ள கலங்களினால் மருந்துகள், கழிவுகள் ஈரலினால் உடைக்கப்பட்டு அகற்றப்படுவதும் தடைப்பட்டுப் போகும். 

இங்கு ஈரல் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனுக்குப் பெரும்பாலும் அனேகமான மருந்துகள் நச்சுத்தன்மையானவையாகவே காணப்படும்.  இப்படி என்னால் காப்பற்ற முடியுமா?  கடவுளால்கூட இயலாது என்றே கூறவேண்டும்.
இவ்வாறான நிலை யாருக்கு? அதிகம் குடிப்பவர்கட்குத்தான் உருவாகும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.  குடிப்பவர்களில் ஈரல் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாத விடயமே.  உயர்தர குடிவகை, தாழ்தரக் குடிவகை, மிகை குடிகாரர், மிதான குடிகாரர் என்றெல்லாம் வகை பிரிப்பது ஏற்றதல்ல.   உடுப்பு வகையின் அளவுபோன்று சிpறிது நடுத்தரம் என்றல்ல.  எல்லாமே மிகைதான். 

மதுவில் மூழ்குபவருக்குத் தெரியாது.  தான் எந்தளவு குடிகாரன் என்பது.  எனினும் மது தொடர்பான குற்ற உணர்வு ஏற்படும் போது அவர் மதுவில் தங்கிவாழ்பவர் என்ற நிலையில் உள்ளார் என்பதே அர்த்தம்.  இதை மாறி அர்த்தம் கொள்ள முடியாது.  அதாவது அவர் திருந்துவார் என்று.  அவர் மதுவைக் கைவிட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதன் அறிகுறியே.  மதுதொடர்பான குற்ற உணர்வு என்றுதான் சொல்லவேண்டும்.

இதைவிட மதுவுக்கும்…ஒவ்வோர் மனிதருக்கும் ஒவ்வொரு சகிப்புத்தன்மை காணப்படுகின்றது.  மனித இனம், பால்வகை என்பவற்றுக்கு ஏற்ப மதுவினால் ஏற்படும் பாதிப்பும் மாறுபடுகின்றது. மதுபானத்தினால் மதிமயங்கும் தன்மை, முகம் அதைப்புறல், தலைவலி ஏற்படல் போன்றவையும் ஒவ்வொருவர்க்கு ஒவ்வோர் விதமாக அமைகின்றது. 

மதுபானம் அருந்துவதால் ஏற்படும் மதுப்பாவனையாளர்க்கே உரிய முகத்தோற்றம் இதுவும் ஆளுக்கு ஆள் மாறுபடும்.  இம்மதுப்பாவனையாளருக்கே உரிய முகத்தை நமது இளம் சந்ததியினர் அழகுமிளர்வதாய் கருதுவதே இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மதுப்பவனையாளருக்குரிய முகம் என்னும் போது கன்னங்கள் சற்று அதைத்துக் காணப்படும்.  (Pயசழவனை ளுறநடடiபெ)   இதனால்  ஏற்படும் முகத்தோற்ற மாற்றம் அழகு என்று வர்ணிக்கப்படுகின்றது. எனினும் இம்மாற்றம் நிகழும் போது ஈரலில் உயிர் இரசாயன மாற்றங்கள் பல நிகழ்ந்து விடுவதைப் பற்றி அறிந்தும் அறியாதவை என்று தான் கூறவேண்டும். 
மேலும் மதுபானத்தின்  தாக்கம் பற்றிக் கருதும் போது ஈரல் பாதிப்புறுவது ஆண்களைவிடப் பெண்களில் அதிகம் என்றே ஆய்வுக் கற்கைகள் குறிப்பிடுகின்றன. 

மது அருந்துவதால் ஈரல் பாதிப்புறுகின்றது.  இது பல படிமுறைகளில் நிகழ்கின்றது.  இதன் ஆரம்பப் படிமுறையாக குயவவல டiஎநச   அமைகின்றது.  இதனைத் தொடர்ந்து  hநியவவைளை  இதனூடு  கiடிசழளளை   ஈற்றில் டiஎநச உசைசாழளளை   என்று நகர்கின்றது.  மேற்படி இடைநிலைகளில் மது அருந்துவதை நிறுத்திக் கொள்ளின்,  ஈரல்  தன்னை மீண்டும் நல்ல நிலைக்குத் தேற்றிக் கொள்ள முடியும்.  எனினும் மது அருந்துதல் தொடருமாயின் ஈற்று விளைவு என்பது உறுதி என்றே கூறவேண்டும்.  இங்கு  குயவவல டுiஎநச   இவ் கொழுப்பு உடைத்தழிக்கப்படுவதால் ஈரலில் கொழுப்புப் படிவுகள் ஏற்படுகின்றன.  இந்நிலையில் பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் அற்றவர்களாகவே காணப்படுவர்.  தொடர்ந்து மது அருந்திவரின் மேலும் பாதிப்புக்கள் தொடர்ந்த வண்ணமே செல்லும்.  அவ்வாறில்லாமல் மதுவுக்கு விடை கொடுப்பின் மீண்டும் சுகதேகியாகத் தொடர்ந்தும் வாழ முடியும். இவ்வாறு மது அருந்தும் போது ஈரலில் காணப்படும் பல நொதியங்களின் அளவுகள் மாற்றமடைகின்றன. அத்தோடு சுரக்கப்படும் தன்மையும் மாற்றமடைகின்றது. 

மேலும் அண்மைக்காலங்களில் வுhந நேற லுழசம வiஅநள   இல்  வெளியான ஆய்வுக்கற்கைகளில் மது அருந்துவதால் ஏற்படும் ஈரல் பாதிப்புப் பற்றி அறியப்பட்டுள்ளது. இதன்போது தினம் ஒருகிண்ணம் ;பியர்எனறு பயன்படுத்துவோரில் கூட யுடயniநெ யுஅiழெவசயளெகநசயளந ழச யுடுவு   என்ற நொதியம் அதிகரிக்கப்பட்டு காணப்பட்டமை அறியப்பட்டது.   இது ஈரல் பாதிப்பையே சுட்டி நிற்கின்றது. 

இவை யாவற்றிலும் இருந்து அழகென்பது எது என்பதை உணரும் நிலை எமது இளம் சந்ததியினரிடம் உருவாக வேண்மு;.  ஒரு இளைஞரின் ஆற்றலை இளைஞர்கள் உணரவேண்டும்.  எமது சமூகத்தில் உருப்படியான வழிகாட்டல் எதுவுமில்லாத நிலையில் தவறான கருத்துக்களை விளம்பரங்களும், சினிமாக்களும். சின்னத்திரைகளும் தாராளமாக வழங்கி உசுப்பேத்தி அவர்களை ரணகளமாக்குவதை நாம் நேரில் தரிசிக்க முடிகின்றது.

இளைஞரின் வலுவை மது, புகை என்று அல்லது ஆக்கப் பாதையில் விசையுடன் செலுத்த வகை செய்து எம் சமூகத்தின் ஆன்மாவை உயிரூட்ட வேண்டியது யாவரினதும் கடமையேயாகும்.