Saturday, December 4, 2010

அதிகரித்துவிட்ட தன்னம்பிக்கை தளர்வுகளும்….

தற்போது தற்கொலைகள் தமக்கு உரிய புதிய வேகத்தில் நகர்கின்றன. இதற்கான
காரணங்களை கருதும் போது
எதிர்மறை விமர்சனங்கள் எல்லைதாண்டியநிலையில்
எமது சமூகத்தில் நொந்து போன மனிதர் மீது பழிப்புக்களை
மடடுமே படையல்களாக படைக்கும் எம் மனிதர் கூட்டங்களால் நொந்து போன மனிதர்
மேலும்வெந்து போவதும் விரக்தி நிலை அதனூடு வன்முறை அல்லது தற்கொலை நோக்கி நகர்வதும்
தன் முனைப்பு சிந்தனைகள் முளைவிட முடியாத நிலையும்…. மாணவர்கள் மற்றம்
மக்களிடையே வாசிப்புத்திறன் குன்றிவிட்டதுடன்கேள்விகளை சுமந்து செல்பவனே
விடைகளையும் சுமந்து சென்று ஆலோசனை கேட்கவேண்டிய காலம்என்றால்
சொல்லவேண்டுமா….இன்னும் இ;ன்னும் இவை தாண்டிப்போன நிலையில்
சாதிப்பது தான் வாழ்வு என்ற எண்ணம்.
போட்டிப்பரீட்சைகளை இலக்காக கொண்டு உருவான சமுகம் சாதிப்பதுதாண பெருமை என்ற
எண்ணத்துடன் மழலைகள் முதுகில்கூட மனஉளைச்சலை மட்டும் அடக்கிசெல்வதாய்
தொடர்கிற ….நியம் இவ்வறே…..
 சாதிப்பது மட்டுமல்ல சோதித்துக் கொண்டு விடுபடுவதும் வாழ்வே என்று
உணராத நிலை அதுதாண்டி வீழாமல் இருப்பதில் இல்லை. மகத்துவம் வீழ்ந்த பின்னும்
மீள்வதில் தான் உண்டென உணரும் நிலை உருவாகும் வரை…தொடரும் நெருக்கீடு
நெருக்கீடடின் ஆர்முடுகல் இயக்கத்தில் கதியிழக்கும் சமுகத்திற்கு
ஆற்றுப்படுத்தலின் ஆபத்தில்லாத தன்மையை ஆற்றுப்படுத்தலின் நம்பகத் தன்மை
இரகசியங்கள் பேணப்படல் போன்றன பற்றி; உணராப்படல் வேண்டம்
ஆற்றுப்படுத்தல் என்பது ; எம் சமூகத்தில் மருந்துகளுடு தான் நிகழும் மருத்துவம் என்ற
தவறான மனநிலையும் தொடர்ந்து செல்லும் தொடர் நிலைகளாக…. ஆற்றுப்படுத்தல் அது
சமுக கட்டமைப்பின் பல சம்பிரதாய நிகழ்வகளின் அதாவது வைபவங்களின் உள்ளத்தை
உள்ளத்தால தேற்று;ம் உறவுகளின் தேற்றல் என்று ; உணராத நிலையில் மருந்துகள்
தொடர்பான கசப்புணரவு இவற்றால அன்னியப்பட்டு விட்ட ஆற்றுப்படுத்தல்…மீண்டும்
உயிபெற வேண்டும்..
 அனர்த்தங்களில் உடல் காயங்கள் ஏற்படுவது போன்று அல்லாது உளக்காயங்கள்
எற்படுவது மிக அதிகமாகும்.
உளப் பேரதிர்வானது ஏற்பட்டிருப்பினும் பலர் வெளிப்பாடையாக உணர முடியாத
நிலையிலேயே இருப்பர். இதனால் இவர்கள் மெய்ப்பாட்டு நோய்களாகவும் மனச்சோர்வு
போன்று பல வகையில் வெளிப்படுத்துவர். இவற்றில் மனச் சோர்வானது துயரங்களை
எதிர் கொள்வதால் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுவதும் அத்துடன் அவை மீள மீள
வந்து ஆழ அமிழ்த்தி மனிதனை மூழ்கடிக்கக் கூடியவையுமாகும்.
இதன் அறிகுறிகள்
•       அதிக கவலை
•       மகிழ்ச்சியான விடயங்களில் ஆர்வமின்மைஃ மகிழ்ச்சி
கிடைப்பினும்அனுபவிக்க முடியாமை
•       வுpரக்தி
•       கண்ணீர் சிந்துதல்ஃ அழுதல் மிகை குற்ற உணர்வு
•       தன்னகத் துறுவு
•       உணவில் ஆர்வமின்மை
•       அதிக களைப்பு
•       நித்திரை இன்மைஃ நித்திரைக் குழப்பம்
•       மனதை ஒருமுகப்படுத்த முடியாமை
•       தன்னம்பிக்கையின்மை
•       தற்கொலை எண்ணம் என பலவாறு கூறினாலும்
      ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தன்னம்பிக்கை இழத்தலும் அதை தொடர்ந்து
தற்கொலை யூடு பயணம் செய்வதும் என்ற அமைகிறது.
      மனச் சோர்விற்கான சிகிச்சை முறையை நோக்கம் போது ஆற்றுப்படுத்தல் மற்றும்
பௌதீக முறைகள் என வேறுபடுகின்றது. பௌதீக முறைகள் என வேறுபடுகின்றது. பௌதீக
முறையில் மருந்து மாத்திரைகள் தொடர்பானதாகவும் மென் மின் அதிர்வு முறை
என்பனவும் அடங்குகின்றன.
      மருந்து மாத்திரை கொண்டு சிகிச்சை என்பது அண்மைக்கால ஆய்வுக்கற்கைகள் கொண்டு
நோக்கம் போது தெளிவான நன்மை பயப்பதாகவும் இல்லை.
      அண்மைக் காலத்தில் டீசவைiளா ஆநனiஉயட துழரசயெட டீஆது சற்று புதிய தகவல்களையும்
தருகின்றது. இதில் 372 சோதனைகளில் 100000 பேர் உட்படுத்தப்பட்ட போது
மனச்சோர்வுக்கான மருந்து மாத்திரைகளினால் 65 வயதுக்கு மேற்பட்டவர்கட்கு
தற்கொலை எண்ணம் குறைவடைகிறது எனவும் இளவயதினில் அவை தற்கொலை எண்ணத்தை
கூட்டுவதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
      இவ்வாறான மருந்தியல் முறைசார் சிகிச்சைக்கான எதிர்ப்பு கருத்துக்கள் ஆய்வுகளை
நிரப்பிய வண்ணமே உள்ளன. இத்தோடு தற்போது தற்கொலைகள் அதிகரித்து ஆர்முடுகல்
வேகத்தில் நகர்கின்றன.
      போரின் பாதிப்புக்களை தொடர்ந்து ஆற்றுப்படுத்தல் என்பது மிகவும் சிறப்பாக
அமைய வேண்டிய தேவையை கொண்டுள்ளது. இதைவிட ஆற்றுப்படுத்தல் போதிய இடத்தை
மக்கள் மனதில் பிடிக்க முடியாமை கருத வேண்டிய ஒன்றாகும். (ஆற்றுப்படுத்துவொர்
கையாளும் முறைகள் பெரும்பாலும் மக்களை அன்னியப்பட்டு காணப்படுவதும்
கருதத்தக்கதாகவே உள்ளது).
      அத்துடன் ஆற்றுப்படுத்துகையானது புறக்கணிக்கப்படுகின்றது. கணிக்கப்பட்டது
ஒன்றாகவே உள்ளது. ஊக்கம் குன்றியதாகக் காணப்படுகின்றது. சில வருடங்களிற்று முன்
சிறப்பாக வெளிநாட்டு நிபுணர்கள் வருகையுடன் பேராசிரியர் தயா. சோமசுந்தரம்
மிகவும் பெரியதொரு சேவையை செய்து வந்தது. மெச்சத்தக்கதாகும்.
      இந்நிலையில் ஆற்றுப்படுத்தலின் தேவை அதிகரிக்கப்பட்ட நிலையில்
ஆற்றுப்படுத்தல் நிறுவனங்கள் முடங்கிக் கிடப்பதை நோக்கினால் கவலைக்குரியதாகவே
உள்ளது.
      எனவே வளர்க்க வேண்டிய தேவை பத்திரிகைகள் உளவளதுணை நிலையங்களையே சார்ந்தது.