Saturday, December 4, 2010

புற்று நோய் என்பது...

     புற்று நோய் பற்றி யாவரும் அறிந்திருப்பினும் அது தொடர்பில் பயம் எல்லோர் மனதிலும் காணப்படுகிறத. இதனால் புற்று நோய் தொற்று நோயாக இருக்குமோ என்று எண்ணுபவர்களும் உள்ளனர். இதனால் தமக்கும் வந்துவிடுமோ என்று எச்சரிக்கை உணர்வால் உந்தப்படுபவர்களும் உள்ளனர். புற்றுநோய் பற்றி எச்சரிக்கையுடன்  காணப்படும் மக்கள் புற்றுநோயி;ன் அறிகுறி பற்றியே அதிகம் அறிய முற்படுகின்றனர். அத்துடன் புற்று நோய் பற்றிய மன உலைச்சலாலும் நோயில்லாமலே மருத்துவரை நாடும் மக்கள் கூட்டம் என்று ஒரு வகையினரும் உருவாகியுள்ளனர்.

     இவர்கள் பொதுவாக நோயின் அறிகுறி பற்றியே அறிய முற்படுகின்றனரே தவிர நோயின் தோற்றுவாய் பற்றி அறிவதற்க்கு நோய் உருவாகும் விதம் பற்றி அறிவதற்கு ஏற்றவகையில் கருத்துக்களை அறிய முடியாதபடி மருத்துவம் தன்னை அந்நியப்படுத்தி விட்ட நிலையில் உள்ளது. இவற்றினால் மருத்துவம் மூடுமந்திரம் என்ற நிலையில் இருந்து இன்னும் மோசமாக மக்கள் ஓசயல எடுத்தால் நோயை இனங்காணலாம் என்பதை தவறுதலாக ஓசயல எடுத்தால் ளுஉயn செய்தால் நோய் மாறும் என்ற தவறான எண்ணத்தில் மருத்துவ உலகின் கவர்ச்சியான விளம்பரங்களை எண்ணி தேவையற்ற கதிர்வீச்சல்களை உள்வாங்குதலும் வளமையாகிவிட்ட நிலையாக உள்ளது. தேவையற்ற கதிர் வீசல்களை உள்வாங்குவதால் கூட புற்று நோய் உருவாகலாம் என்பதை மக்கள் உணராத நிலை காணப்படுகிறது. இவை போன்றே மக்கள் மனதில் தவறான எண்ணங்கள் அதிகரித்துவிட்டன எனின் தவறல்ல… புற்று நோய் தொற்றி விடுமோ என்ற எண்ணமும் இவ்வாறே காத்திரமாகவே செறிந்துள்ளது.
புற்று நோய் என்பது கலங்களின் ஒழுங்கற்ற கட்டுக்கடங்காத வளர்ச்சி என்றே கூற வேண்டும். சாதாரண இழையங்களில் கட்டிகளாக அல்லது கழலைகளாக மாறிய கலங்களே புற்று நோய் என வெளிக்காட்டப்படுகின்றன.

     இவை நீருடோ சுவாசத்தூடோ அல்லது தொடுகை போன்றவற்றினூடோ மற்றும் வழிகளினூடாக தொற்றுவன அல்ல.

     உடற் தொழிற்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் போது உயர் குருதி அமுக்கம், நீரிழிவு, இதய நோய்கள் இவை போன்று பல நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு உடல் இயக்கவியலில் ஏற்படும் மாற்றங்களே; காரணமாகின்றன. எனினும் இவை பற்றி எவரும் தொற்றுவதாக அஞ்சுவதில்லை இவ்வாறான ; மனப்பான்மை மக்களிடையே புற்றுநோய்தொடர்பாக உருவாதல் வேண்டும். ஏனெனில் புற்று நோய்க்கான சிகிச்சை முறைகளில்  கதிரியாக்க, இரசாயன சத்திர சிகிச்சை முறைகள் காணப்படினும் நோயின் தீவிர நிலையில் அன்பான பராமரிப்பம் ஒர் சிகிச்சை முறையாகவே காணப்படுகின்றது.

     புற்றுநோயை பற்றி நாம் கருதுகையில் எமது உடலானது கலங்கள் என்னும் சிறு அமைப்புக்களால் ஆனது அதாவது சிறுவர்கள் உருவாக்கள் செய்வதற்கு பயன்படுத்தும் டீரடைனiபெ டிடழஉமள போன்றவை என்றே கூறலாம். இன்னும் கூறின் வீடு கட்டுவதற்கு பயன்படும் அரிகற்கள் போன்றவை. இவை ஒழுங்காக அடுக்கப்பட்டு கட்டப்படும் போது ஒரு நேர்த்தியான வடிவம் உருவாகின்றது.

     இவ்வாறே கலங்கள் என்னும் அமைப்புக்களாலும் எமது உடலை அதாவது ஒல்வொரு அங்கத்தையும் ஆக்குகின்றன. எமது உடலில் நாளாந்தம் கலங்கள் இறக்கின்றன. அவ்விடத்தை புதிய கலங்கள் நிரப்புகின்றன. இவையாவும் ஒரு சீரான விகிதத்தில் நடைபெறுவதால் உடலில் கட்டிகள் ஏற்படுவதில்லை. உடலில் கட்டிகள் ஏற்படும் Nபுhது அவை வெளித்தள்ளிக் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. அங்கே நாம் சிந்திப்பின் குறித்த பகுதியில் கலங்களின் அபரிமிதமான (மிகை)வளர்ச்சியே காரணம் என்பதை உணரலாம்.

     உடலில் கலங்களின் உருவாக்கம் எல்லாம் சீரான விதத்தில் நடைபெறுவதற்கு என்று சிறப்புப் பொறிமுறைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன.     

     மனிதனது உடலும் கடவுளின் ஒரு விசித்திரமான படைப்பு என்நே கூறலாம். ஓர செயற்பாட்டை செய்வதற்கு கணணிகளில் எவ்வாறு நிகழ்ச்சி திட்டம் எழுதப்படுகின்றதோ அது போன்றே சுருக்கக் குறியீட்டு வசதிகள் பலவும் உருவாக்கப்பட்டு நிறமூர்த்தங்கள் என்னும் அமைப்புக்களில் கலங்களின் கருக்களில் காணப்படும் இந்த நிற மூர்த்தங்களின் தகவல்களின் அடிப்படையில் எமது உடலின் கட்டமைப்பானது ஆக்கப்படுகின்றது. இந் நிறமூர்த்தங்களில் காணப்படும் தகவல் மாறுபட்டு போகின்ற நிலையில் கலங்களின் வளர்ச்சியும் மாறுபடுகின்றன. அதனோடு கட்டுக்கடங்காத வளர்ச்சியும் ஏற்படுகின்றது. இந் நிறமூர்த்தங்களில் ஏற்படும் தகவல் மாற்றங்கள் கதிர்வீச்சுக்கள் புற்று நோயை உண்டாக்கும் இரசாயன பொருட்களால் ஏற்படுகின்றன. மேலும் மனித உடலின் கட்டமைப்பு உருவாக்கத்திற்கு பொறுப்பான நிறமூர்த்தங்கள் இவை மரபணுக்கள் என்னும் ஜீன்கள் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும். இவை உருவாக்கப்படும் போது ஏற்படும் தவறுகளை சீர் செய்வதற்காக விஷேட வகை மரபணு ஒன்று உருவாக்கப்படுகின்றது. இது Pள3 எனும் பெயர் பெறுகின்றது. எனினும் இவ் கட்டமைப்பு அலகில் தவறு ஏற்படும் போது சீர் செய்வதற்கு மாற்று நடவடிக்கைகள் எதுவுமில்லாத நிலையில் இக்கட்டமைப்பில் ஏற்படும் தவறே புற்று நோயாக வெளிக் காண்பிக்கப்படுகின்றது.

     இங்கு மனித உடலில் கட்டமைப்பை உருவாக்கிய கடவுளின் தவறு என்று கருத வேண்டிய நிலை காணப்படுகின்றது.

     இவ்வாறான புற்று நோயின் உருவாக்க பொறிமுறையை கருதும் போது நாம் அது தொற்று நோய் என்று கருதமுடியாதநிலை உறுதியாகின்றது.

     புற்று நோயால் பாதிப்புறுதல் கடவுளின் தவறு என்றே சொல்லும் நிலையில் தொற்றுமு; நோயாக அல்லாத புற்று நோயின் பாதிப்பில் வருந்தும் நோயாளியை வருத்துவது மனவேதனைக்குரிய தொன்றாகும். நோயாளி அவர் உங்கள் அன்புக்குரியவர்.